{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w5pkn7p3/", "data": {"id": "w5pkn7p3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w5pkn7p3/", "kind": "word", "headword": "மேகக் கிரந்தி நோய்ச் சோதனை", "romanization": "mēkak kiranti nōyc cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:13.709881+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவர் கிரந்தி என்னும் மேகப் புண் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறியப் பயன் படுத்தப்படும் ஒருவகை இரத்தச் சோதனை. ஒவ்வொருவரின் குருதியிலும் எதிர்ப்புப் பொருளுக்கு உதவிபுரியக்கூடிய 'இணைப் பான்' என்னும் பொருள் அடங்கியிருக்கிறது. ஒரு நச்சுப் பொருள் அதாவது, ஆ என்ற வேறொரு பிராணியின் இரத்தம் 'அ' என்ற பிராணியின் இரத்தத்தில் செலுத்தப்படும் போது, அந்த நச்சுப் பொருள் ('ஆ' இரத்தம்) தாக்குவதற்கு முன்பு இந்த இணைப்பானுடன் கலக்க வேண்டும். இணைப் பானுடன் நச்சுப்பொருள் கலந் திருந்தால் நச்சு அ வின் இரத்தத்தில் கலந்துவிட்டது என்று பொருள். 'அ'வின் குருதியை மேகக் கிரந்தி பீடித்திருக்குமானால், 'ஆ நச்சு கலப்பதற்கு முன்பு 'அ' இரத்த இணைப்பானுடன் இணைந்துவிடும். அப்போது, 'ஆ' நச்சு கலப்பதற்கு இணைப்பான் எதுவும் எஞ்சியிருக்காது. அதனால், 'ஆ' நச்சு, 'அ' குருதியின் உயிரணுக்கள் சேதமடையாமல் இருக்கும் இதனை இச்சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்", "needs_definition": false, "gloss_en": "wasserman test (wasserman reaction)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1166"}]}}