{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vh5mhuga/", "data": {"id": "vh5mhuga", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vh5mhuga/", "kind": "article", "headword": "இலிங்கராசர் கோயில்", "romanization": "iliṅkarācar kōyil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.831753+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரத்திலுள்ள கோயில்களுள் ஒன்று.", "body_ta": "ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரத்திலுள்ள கோயில்களுள் ஒன்று. கோனாரக்கு (Konarak), பூரி செகந்நாதம் போன்ற\n\nஇலிங்கராசர் கோயில்\n\nஊர்களிலுள்ள கோயில்களைப் போன்று இக்கோயிலும் புகழ்மிக்கது. இக்கோயில் கி.பி. 1000–ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது கீர்த்திவாசர் கோயில் என்றும் கூறப்படும். இக்கோயிலைக் கட்டியவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை. எனினும் இக்கோயிலைச் சனமேசயர் என்னும் அரசர் கட்டியதாகக் கருதுகின்றனர். இலிங்கராசர் கோயில் பஞ்சரதம் என்னும் கோயில் அமைப்பை உடையது. இக்கோயிலின் சிகரம் மிக உயரமானது. இக்கோயில் கருவறையையும் மண்டபத்தையும் மேலும் இருபெரும் மண்டபங்களையும் கொண்டு விளங்குகிறது. நரசிம்மர், அனங்கபீமர் போன்ற அரசர்களால் நாட்டிய மண்டபமும் உணவுக்கூடமும் பிற்காலத்தில் இக்கோயிலினுள் கட்டப்பட்டன. கோயிலின் மூலப் பகுதி இளஞ்சிவப்புநிற மணற்கல்லினால் கட்டப்பட்டது. கோயிலின் மாடக்குழிகளில் கணேசர், பார்வதி, கந்தன் போன்ற தெய்வச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள விலங்குகள், பறவைகள் இளந்தம்பதிகள் போன்ற சிற்பங்கள் மிக்க அழகு வாய்ந்தவை. சிகரத்தின் கீழ்ப்பகுதி 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. திக்குப்பாலகர்களும் இக்கோயிலில் உள்ளனர். சிகரத்தின் தளங்கள் பிற கோயில்களைவிட உயரமாகக் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலிலுள்ள சகமோகன் என்னும் மண்டபம் ஏறத்தாழ 30 மீ. உயரமுடையது. மண்டபத்தின் மேற்கூரையில் கண்களைக் கவரும் காட்சிகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கட்டடக் கலைத்திறன் இந்தியாவின் சிறப்புமிக்க கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகும்."}}