{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vevcx4rf/", "data": {"id": "vevcx4rf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vevcx4rf/", "kind": "word", "headword": "சிதம்பரப் பாட்டியல்", "romanization": "citamparap pāṭṭiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:58.473525+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாட்டியல் என்பது 96 வகைப் பிரபந்தங்களை எப்படிப் பாடப்படுதல் வேண்டும் என்ற முறைகளையும், ஒரு நூலின் தொடக்கச் செய்யுளின் முதல் எழுத்து, சீர் முதலானவை எப்படி அமைய வேண்டும் என்ற முறைகளையும் அறிவிக்கும் நூல். இம்முறையில் பல நூல்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று இது. இதனைப் பரஞ்சோதி முனிவர் என்பார் இயற்றியருளினார். காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு. பாட்டியற் நூற்களால் அமுத எழுத்துக்கள் இன்ன, நச்செழுத்துக்கள் இன்ன என்பன போன்ற குறிப்புக்களையும் அறியலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 490"}]}}