{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vcj57dck/", "data": {"id": "vcj57dck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcj57dck/", "kind": "article", "headword": "இளங்கீரந்தையார்", "romanization": "iḷaṅkīrantaiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.796786+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சங்கப் புலவர்களுள் ஒருவர்.", "body_ta": "சங்கப் புலவர்களுள் ஒருவர். கீரன் தந்தையார் என்பது கீரந்தை என மருவி வழங்கும். கீரந்தையார் என மருவிய நிலையில் இப்பெயரே ஒரு புலவருக்கு இயற்பெயராக அமைந்திருத்தலும் கூடும். இளங்கீரந்தையார் என்பது கீரந்தையாரின் இளவலைக் குறிக்கும் பெயராகவும் உள்ளது. இவருடைய ஒரே பாடல் குறுந்தொகை 148–ஆம் பாடலாக அமைந்துள்ளது. முல்லைத்திணையில் தலைவி கூற்றாக அமைந்துள்ள இப்பாடலில், செல்வக் குடிச் சிறுவர்கள் அணிந்துள்ள கிண்கிணி என்னும் காலணியின் முகப்புத் தவளை வாயினைப் போல உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர் கீரந்தை என இறையனார் களவியலுரையும், கீரந்தையார் என அடியார்க்கு நல்லார் உரையும் குறிப்பிடுகின்றன. திருவள்ளுவமாலையில் 19–ஆம் பாடலும், பரிபாடலின் இரண்டாம் பாடலும் கீரந்தையாரால் பாடப்பட்டனவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் வேறு வேறு புலவர்கள். இவர்களுக்கும் இளங்கீரந்தையாருக்கும் உறவு இருப்பதாகத் தெரியவில்லை."}}