{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vccrchd3/", "data": {"id": "vccrchd3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vccrchd3/", "kind": "word", "headword": "சேரமான் பெருமாள்", "romanization": "cēramāṉ perumāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.309647+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் பொறையன் என்பானின் திருமகனாராகக் கொடுங்கோளுரில் பிறந்தனர். இவர் மாக்கோதையார் என்னும் பெயரும் உடையவர். இவர் சேரநாட்டைச் சார்ந்த ஊருக்கு மன்னரானமையின் சேரமான் பெருமான் எனப்பட்டார். இவர் சுந்தரருடைய நண்பர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பாடிய நூற்கள் திருக்கைலாயஞான உலா பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை முதலியன. காலம் 9ஆம் நூற்றாண்டு. இவர் தாம் அரசு நடத்துகையில் எல்லா உயிர்களின் பேச்சையும் அறிந்து அவற்றிற்கு நன்மை செய்யவேண்டி, அவை கூறியவற்றை அறிந்து வந்த காரணத்தால், கழறிற்று அறிவார் என்ற பெயரையும் பெற்றவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 596"}]}}