{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v7h9prrq/", "data": {"id": "v7h9prrq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v7h9prrq/", "kind": "article", "headword": "அசட்ராகான்", "romanization": "acaṭrākāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.798996+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோவியத் உருசியாவின் தென் பகுதியில் வால்கா ஆற்றின் கழிமுகத்தில் உள்ளதொரு நகரம்.", "body_ta": "சோவியத் உருசியாவின் தென் பகுதியில் வால்கா ஆற்றின் கழிமுகத்தில் உள்ளதொரு நகரம். காசுபியன் கடலுடனும், வால்கா ஆற்றுத்துறைமுகங்களுடனும் நல்ல நீர்த் தொடர்புகளைக் கொண்டுள்ளதால், அசட்ராகான் (Astrakhan) சீரிய வாணிக மையமாகக் கருதப்படுகிறது. மீன்\n\nஅசட்ரகான் நகர்\n\nபிடித்தல் இங்கு நடைபெறும் சிறப்புத் தொழில்களுள் ஒன்றாகும். உப்பிட்டு உலர்த்திய உயர்தர மீன்வகையின் கருச்சினையும், அசட்ரகன் என்னும் கவர்ச்சியான ஆட்டுத்தோலும் இப்பகுதியின் செய்பொருள்களாம்."}}