{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uxcrg5qw/", "data": {"id": "uxcrg5qw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uxcrg5qw/", "kind": "article", "headword": "இறை", "romanization": "iṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.719352+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இறை என்பது அரசனுக்குச் செலுத்தப்படும் வரியாகும்.", "body_ta": "இறை என்பது அரசனுக்குச் செலுத்தப்படும் வரியாகும். பண்டைய நாளில் மன்னர்க்குரிய வருவாய்களுள் முதன்மையானது நிலவரியே. நில வருவாயின் ஒருபகுதியை வரியாக அரசனுக்குச் செலுத்த வேண்டும். இந்நிலவரியையே முதலில் இறை என்றனர். பின்னர் மற்ற வரிகளும் இறை எனக் குறிக்கப்பட்டது.\n\nதொழில் செய்பவர்களும் இறை செலுத்த வேண்டும். இது இந்நாளில் உள்ள தொழில் வரியை ஒத்தது. இவ்வரி தறி இறை, செக்கிறை, மனையிறை, மாவிறை என்றும் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. தறி இறை என்பது நெசவுத் தொழில் புரிவோரிடம் பெறப்பட்ட வரியாகும். இது போல் செக்கிறை என்பது எண்ணெய் வணிகர்க்கு விதிக்கப்பட்ட வரி.\n\nஇறை கொடாதார் நிலங்களைப் பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் இருந்தது. பல ஊர்களில் இறை செலுத்த இயலாமல் குடிமக்களுள் பலர் ஊரையும் நாட்டையும் விட்டுவிட்டு ஓடிவிட்ட செய்திகளும் காணக்கிடைக்கின்றன. சொ.சா."}}