{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uupdss96/", "data": {"id": "uupdss96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uupdss96/", "kind": "article", "headword": "அலாசுகா மலைத்தொடர்", "romanization": "alācukā malaittoṭar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.482519+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான அலாசுகாவின் (Alaska) மலைத்தொடர்.", "body_ta": "அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான அலாசுகாவின் (Alaska) மலைத்தொடர். அது அலாசுகாவின் மிக நீண்ட மலைத்தொடர். அலாசுகா முந்நீரகத்திலிருந்து யூகான் நிலப்பகுதி வரை இத்தொடர், தென் மத்திய அலாசுகா என்னும் பெயரில் விளங்குகிறது. வட அமெரிக்காவின் மிக உயர்ந்த மலையுச்சியான மவுண்டு மெக்கின்லி இத்தொடரில்தான் உள்ளது. இதன் மலைச் சரிவுகளில் பலநூறு பனிப் பாறைகள் உள்ளன."}}