{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uue5gjbk/", "data": {"id": "uue5gjbk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uue5gjbk/", "kind": "article", "headword": "ஆல்ஜிரியா", "romanization": "āljiriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.585666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மொராக்கோவிற்கும் டுனிஷியாவிற்கும் நடுவேயிருக்கிறது.", "body_ta": "மொராக்கோவிற்கும் டுனிஷியாவிற்கும் நடுவேயிருக்கிறது. நாட்டு மக்கள் பெர்பர்களும் ராபியர்களுமாவர். இந்நாடு பழங்காலத்தில் கார்த்தேஜ் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவும், பின்பு\n\nரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவுமிருந்தது.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அராபியரால் கைப்பற்றப்பட்டது. அப்பொழுதுதான் நாட்டு மக்கள் முஸ்லிம்களாயினர். 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஆல்ஜிரியா துருக்கி சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.1827-ல் பிரெஞ்சு அரசாங்கம் துருக்கியிடமிருந்து ஆல்ஜிரியாவைக் கைப்பற்றியது. ஆல்ஜியர்ஸ் தலைநகரத்தில் வசிக்கும் பிரெஞ்சுக் கவர்னர்-ஜெனரல் நாட்டைப் பரிபாலித்து வருகிறார்.\n\nஆல்ஜிரியாவின் முக்கிய நகரங்கள், ஆல்ஜியர்ஸ், ஓரான், கான்ஸ்டன்டைன். ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, செம்மறியாடு முதலியவை ஆல்ஜிரியாவில் மிகுதியாகக் கிடைக்கின்றன. பரப்பு: 8.47.500 ச.மைல். மக் : 88.76,016 (1948). எம். வீ. சு.]]"}}