{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/up5a8yh3/", "data": {"id": "up5a8yh3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/up5a8yh3/", "kind": "article", "headword": "அசிமுல்லாக்கான்", "romanization": "acimullākkāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.051251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளுள் ஒருவர்.", "body_ta": "இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தியாகிகளுள் ஒருவர். இவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் மாநகரில் 1834–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அரசாங்கப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தனிப் பெரும் திறமையின் காரணமாக இவர் நானா சாகேபின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று நானா சாகேபின் வழக்கில் வாதாடினார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.\n\nஇந்தியாவுக்குத் திரும்பியவுடன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முற்பட்டார். வெள்ளையர் ஆட்சியை வேரறுக்க நானா சாகேபு செய்த போராட்டத்தில் உறுதுணையாக நின்றார். 1857–ஆம் ஆண்டு மூண்ட பெரும் புரட்சி தோற்ற போது, ஆங்கில அரசுக்கு அகப்படாமல் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று, நானா சாகேபுடன் நேபாள நாட்டு எல்லைக்குச் சென்றுவிட்டார். அங்கு இவர், 1859-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் காலமானார்."}}