{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/um4s5a6d/", "data": {"id": "um4s5a6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/um4s5a6d/", "kind": "word", "headword": "அடியெண் வரிசைமுறையாக்கப் படி முறை", "romanization": "aṭiyeṇ varicaimuṟaiyākkap paṭi muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.868337+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0-999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிசைப்படுத்தும் முறையைப் பார்ப்போம். முதலில் எண்களின் பட்டியல், நூறு மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் 10 குழுவாகப் பிரிக்கப்படும். பிறகு ஒவ்வொரு குழுவும் பத்து மதிப்பிடத்தில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் பத்துப் பட்டியல்களாக வரிசைமுறைப் படுத்தப்படும். இறுதியில் ஒவ்வொரு பட்டியலும் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வரிசைமுறைப்படுத்தப்படும். இந்தத் தருக்கப் படிமுறை இரும மதிப்பு அடிப்படையில் உறுப்புகளை வரிசைமுறைப் படுத்த மிகவும் திறன் வாய்ந்ததாகும். ஒவ்வொரு குழுவும் அதிகப்பட்சம் இரண்டு குழுக்களையே கொண்டிருக்கும். ஒப்பீடும் இரண்டு இலக்கத் தோடுதான்.", "needs_definition": false, "gloss_en": "radix sorting algorithm", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1206"}]}}