{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uhfch2d2/", "data": {"id": "uhfch2d2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uhfch2d2/", "kind": "article", "headword": "ஆல்ட்டாயிர்", "romanization": "ālṭṭāyir", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.260886+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Altair) திருவோணத்திலுள்ள நட்சத்திரங்களுள் மிகவும் பிரகாசமானது.", "body_ta": "(Altair) திருவோணத்திலுள்ள நட்சத்திரங்களுள் மிகவும் பிரகாசமானது. பூமிக்கு அருகிலும், ஒளிமிகுந்தும் உள்ள நட்சத்திரங்களுள் இதுவும் ஒன்று. இது நம்மிடமிருந்து சுமார் 16 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைவிடச் சற்றுப் பெரிய இந்த நட்சத்திரம் வெண்மையானது."}}