{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ufnjyvea/", "data": {"id": "ufnjyvea", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ufnjyvea/", "kind": "article", "headword": "அக்பர்நாமா", "romanization": "akparnāmā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.634030+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அபுல்பசல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல்; அக்பரின் ஆட்சியை விரிவாக விளக்குவது.", "body_ta": "அபுல்பசல் என்பவரால் எழுதப்பட்ட ஒரு நூல்; அக்பரின் ஆட்சியை விரிவாக விளக்குவது.\n\nதம் ஆட்சியைப் பற்றி உண்மை உணர்வுடன் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று அக்பர் கட்டளையிட்டார். புகழுக்குரிய செய்திகளையும், தொடர்ந்து பெற்றுவரும் வெற்றிகளையும் அந்நூல் சுட்டிக்காட்ட வேண்டுமென அவர் கருத்துத் தெரிவித்தார். அபுல்பசல் பெரு முயற்சி செய்து இந்நூலை எழுதுவதற்கான மூலச் சான்றுகளைத் திரட்டி, அவற்றைத் திறனாய்வு செய்தார். அவ்வரலாற்று நூலை அவர் கி.பி. 1596-இல் எழுதி முடித்தார். அக்பர் நாமாவை எல்பின்சுடன் (Elphinston) என்பாரும் வின்சென்ட் சுமித்து என்பாரும் பாராட்டி எழுதியுள்ளனர்."}}