{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uc5a79dm/", "data": {"id": "uc5a79dm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uc5a79dm/", "kind": "word", "headword": "வில்லிபுத்தூரார்", "romanization": "villiputtūrār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.692550+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் நடுநாட்டில் திருமுனைப்பாடியைச் சார்ந்த சனியூரில் பிறந்த வைணவ அந்தணர். சந்தக்கவி பாடுவதில் வல்லவர். தம்மோடு வாதம் செய்து தோற்றவர் காதை அறுத்துவந்தவர். இதனால்தான் \"குறும்பியளவாகக் காதைத் தோண்டி, எட்டினமட்டும் அறுப்பதற்கு இங்கு வில்லி இல்லை\" என்று ஒரு புலவரும் பாடினர். இவர் அருணகிரிநாதர் பாடிய கந்தர் அந்தாதிக்கு உரை கூறியவர். அதில் 34-வது கவிக்கு மட்டும் உரை கூறத் தெரியாது தோற்றார் என்று கூறுவர். சிறந்த ஆழ்ந்த வைணவப் பற்றுடையவராயினும், சிவபரத்துவம் கூறுவதில் சிறிதும் பின்வாங்காதவர். இதனை இவர் பாடிய பாரதத்தில் வரும் அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் நன்கு காணலாம். இவர் வைணவராக இருந்தும் திருமால் பன்றியாக வடிவு பூண்டு சிவபெருமான் திருவடிகளைக் காணச்சென்றதைப் பாடியிருப்பது கொண்டு உண்மையினை ஒளிக்காமல் கூறும் உத்தமர் என்பது தெரிகிறது. இவர் பாடிய நூல் பாரதம் என்பது. கி.பி.15ஆம் நூற்றாண்டு. வக்கபாகை வரபதி யாட்கொண்டானால் ஆதரிக்கப்பட்டு அவன் வேண்டுகோளுக்கு இணங்கிப் பாரதம் பாடியவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 624"}]}}