{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ua35a8cf/", "data": {"id": "ua35a8cf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ua35a8cf/", "kind": "article", "headword": "இக்தியார்னிஸ்", "romanization": "iktiyārṉis", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.095138+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Ichthyornis)", "body_ta": "(Ichthyornis)\n\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒருவகைப் பறவை. நன்றாகப் பறக்கக் கூடியதாக இருந்திருக்கவேண்டும். இதன் தாடையில் பற்கள் தனித்தனிக் குழிகளில் இருந்தன. இப்போதுள்ள பறவைகளுக்கிருப்பது போல மார்பெலும்பு படகு வடிவுள்ளது. அதன் நடுவில் ஏரா (Keel) நன்றாக வளர்ந்திருந்தது. சிறகெலும்பும் பறப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. இது இப்போதுள்ள புறாக்களைப்போல இருந்திருக்கலாம். வட அமெரிக்காவில் பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன் கிரிட்டேஷஸ் காலத்தில் இது இருந்தது."}}