{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u79tqzsr/", "data": {"id": "u79tqzsr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u79tqzsr/", "kind": "word", "headword": "நிட்டினால்", "romanization": "niṭṭiṉāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.190711+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவு உலோகம். நிக்கலும் டைட்டே னியமும் இணைந்த உலோகக் கலவை. இது தனது பண்பியல்புகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஒரு நிட்டினால் சுருள் தயாரிக்கப்பட்ட பின்னர் அது முறுக்கப்படுகிறது அல்லது அதன் வடிவு நீங்கும் அளவுக்கு நீட்டப்படுகிறது என்றால், அதே வெப்ப நிலைக்கு மீண்டும் சூடாக்கும்போது அது தனது பழைய சுருள் வடிவுக்கு மீண்டும் திரும்பிவிடும். இதனைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். இதனைக் கொண்டு பற்குழிகளை நிரப்பலாம். வாதநோயைக் குணப்படுத்த ஊன்று பொருளாகப் பயன்படுத்தலாம். இன்றியமையாத் தமனிகளில் வலைச் சட்டங்களாகப் பொருத்தி குருதிக் கட்டுகளைத் தடுக்கலாம். விண்வெளி மற்றும் இராணுவப் பயன்பாடுகளுக்கும் இது ஏற்றது", "needs_definition": false, "gloss_en": "nitinal", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 740"}]}}