{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u4kd46v7/", "data": {"id": "u4kd46v7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u4kd46v7/", "kind": "article", "headword": "அவேரி", "romanization": "avēri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.042116+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கருநாடக மாநிலம் தார்வார் மாவட்டத்திலுள்ள ஊர்.", "body_ta": "கருநாடக மாநிலம் தார்வார் மாவட்டத்திலுள்ள ஊர். பிற்காலச் சாளுக்கியரின் கோயிற் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக அவேரி (Haveri) விளங்குகிறது. இங்குள்ள கோயிலின் பெயர் சித்தேசுவரம். இது சிவனுக்குரிய கோயில், இங்குப் பல சிறுதெய்வங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நூறு ஆண்டுகட்கு மேலாகச் சமணர்களும் பிற சமயத்தினரும் தங்கள் வழிபாட்டு இடமாக\n\nசித்தேசுவரம் கோயில்-அவேரி\n\nஇக்கோயிலைப் பயன்படுத்தியுள்ளனர். கோயிலின்மாடக் குழிகளின் சிற்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. இங்குள்ள தேவியின் நெஞ்சளவுச்சிலையொன்று, பிற்காலச் சாளுக்கியரின் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது."}}