{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u49vcqf2/", "data": {"id": "u49vcqf2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u49vcqf2/", "kind": "article", "headword": "ஆல்பர்க்", "romanization": "ālpark", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.387039+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆல்பர்க் (Aalborg) டென்மார்க்கில் ஜட்லாந்து தீபகற்பத்தின் வடக்கிலுள்ள ஒரு பட்டினம்.", "body_ta": "ஆல்பர்க் (Aalborg) டென்மார்க்கில் ஜட்லாந்து தீபகற்பத்தின் வடக்கிலுள்ள ஒரு பட்டினம். டென்மார்க்கின் பண்டைய நகரம். சிமென்டு செய்தல், புகையிலை தயாரித்தல், சாராயம் இறக்குதல், ரசாயனப் பண்டங்கள் செய்தல், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் முதலிய கைத்தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. மக்: 79,806(1950). கே. ஆர்.]]"}}