{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tzs3teyw/", "data": {"id": "tzs3teyw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tzs3teyw/", "kind": "article", "headword": "ஆர்கான்", "romanization": "ārkāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.405837+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்கான் (Argon) : குறியீடு A : அணுநிறை 39.944 : அணுவெண் 18.", "body_ta": "ஆர்கான் (Argon) : குறியீடு A : அணுநிறை 39.944 : அணுவெண் 18. சடவாயுக்களில் (த.க.) ஒன்று. இது 1894-ல் சர் வில்லியம் ராம்சேயினால் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றில் 0.932% லிருந்து 0.935%வரை இது உள்ளது. இதன் அடர்த்தி 1.78364 கிராம் லிட்டர், கொ.நி.-186°; உ. நி. 189.6. பூமியின் ஒவ்வொரு சதுர மைல் பரப்பின் மேலும் உள்ள காற்றில் 80,00,00,000 ராத்தல் ஆர்கான் உள்ளதெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் கரைதிறன் 5.8 க.செ.மீ/0° காற்றிலிருந்து மற்ற வாயுக்களை அகற்றி இது தயாரிக்கப்படுகிறது. மின்சார விளக்குக்களில் அடைக்க இது பயன்படுகிறது. ம. ஏ. து.]]\n\nஆர்கான் (Argonne) பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு காடு. இரண்டு உலக யுத்தங்களிலும் இப் பிரதேசத்தில் பிரெஞ்சுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே பெரும்போர் நடைபெற்றது."}}