{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tvwfmzzb/", "data": {"id": "tvwfmzzb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tvwfmzzb/", "kind": "article", "headword": "இந்தியக்கணித சங்கம்", "romanization": "intiyakkaṇita caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.996665+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Indian Mathematical Society) 1907-ல் பூனாவில் பெர்குசன் கல்லூரிக் கட்டடத்தில் நிறுவப்பெற்றது.", "body_ta": "(Indian Mathematical Society) 1907-ல் பூனாவில் பெர்குசன் கல்லூரிக் கட்டடத்தில் நிறுவப்பெற்றது. பிற நாட்டு அறிஞர்களும் இதில் உறுப்பினராக இருக்கிறார்கள். இச்சங்கத்தின் ஆதரவில் கணித மாநாடு 1917 முதல் அண்மைக் காலம் வரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாக நடந்து வந்தது; இப்போது ஆண்டுக்கு ஒரு முறையாக நடைபெற்று வருகின்றது. ‘சங்க இதழ்’, ‘கணித மாணவன்’ என்னும் இரண்டு காலாண்டு இதழ்களை இது வெளியிடுகின்றது. சங்கத்தின் அலுவலகம் இப்போது டெல்லிப் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகிறது. சங்கத்தின் நூல் நிலையம் சென்னையிலுள்ள இராமானுஜம் கணித நிலையத்தில் இருக்கிறது."}}