{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tszf4r2r/", "data": {"id": "tszf4r2r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tszf4r2r/", "kind": "article", "headword": "ஆர்மா", "romanization": "ārmā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.566760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Armagh) வட அயர்லாந்தின் கவுன்டிகளில் ஒன்று.", "body_ta": "(Armagh) வட அயர்லாந்தின் கவுன்டிகளில் ஒன்று. பரப்பு : 489 ச. மைல். மக் : 1,14,226 (1951). வடபாகம் செழிப்பு மிக்கது. தென்பகுதி மலைப் பாங்கானது; மழை குறைவாகையால் வேளாண்மைக்கு ஏற்றதன்று. உருளைக்கிழங்குகளும் ஓட்ஸ் தானியமும் பயிரிடப்படுகின்றன. கால்நடைகள், கோழிகள், பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இங்குப் பழத்தோட்டங்கள் மிகுதி. லினென் கைத்தொழில் நடைபெறுகின்றது. ஆர்மா இதன் தலைநகர். இது முக்கியமான வியாபார ஸ்தலம்."}}