{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tkud3shg/", "data": {"id": "tkud3shg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tkud3shg/", "kind": "article", "headword": "சாறு ஒழுகல் நோய்", "romanization": "cāṟu oḻukal nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:53.652177+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்நோய் தென்னையிலும், கமுகிலும் செரட்டோ சிஸ்டிஸ் பேரடாக்சா என்னும் பூசணத்தால் தோன்றுகிறது.மரத்தின் வெடிப்பு அல்லது காயங்கள் மூலம் சாறு ஒழுகல் நோய் (stem bleeding disease) தோன்றுகிறது.", "body_ta": "இந்நோய் தென்னையிலும், கமுகிலும் செரட்டோ சிஸ்டிஸ் பேரடாக்சா என்னும் பூசணத்தால் தோன்றுகிறது.மரத்தின் வெடிப்பு அல்லது காயங்கள் மூலம் சாறு ஒழுகல் நோய் (stem bleeding disease) தோன்றுகிறது. வெடிப்பிலிருந்து பழுப்பும், சிவப்பும் கலந்த நிறத்தில் சாறு வடிந்து, நாளடைவில் காய்ந்து, கரும்பட்டையாகத் தோன்றும். தாக்கப்பட்ட திசுக்கள் நிறம் மாறி, மஞ்சளான பழுப்பு நிறத்தில் காணப்படும். நோய் பரவுதல் நாளடைவில், மெதுவாக நடைபெறுகிறது. இந்நோயால் ஓராண்டில் இளமரம் காய்ந்து விடக் கூடும். ஆனால், முதிர்ச்சியடைந்த மரங்கள் இந்நோயால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே காய்க்கின்றன. ஆயினும், அதற்கிடையில் பாதிக்கப்பட்ட மரங்கள் வளர்ச்சியிலும், விளைச்சலிலும் குன்றும்.\n\nநோயுற்ற பகுதியைச் செதுக்கி, அகற்றி விட்டுச் சூடான தாரைத் (hot tar) தடவ வேண்டும். மரத்தில் நோய் தாக்கிய பகுதிகளில், குழிகள் காணபபட்டால், மரத்தூளையும், தாரையும் கலந்து மூட வேண்டும். —கா. சிவப்பிரகாசம்"}}