{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tjfm9mxd/", "data": {"id": "tjfm9mxd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tjfm9mxd/", "kind": "word", "headword": "வளி இயக்க விதிகள்", "romanization": "vaḷi iyakka vitikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:50.064207+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1860இல் இவற்றை ஜேம்ஸ் கிளர்க்கு மாக்ஸ்வெல் என்பார் வெளியிட்டார்.இதன் அடிப்படை புனைவுகளான 1. அனைத்து வளிகளும் மூலக்கூறுகள் என்னும் துகள்களாலானவை 2. வளிமூலக்கூறுகள் நிலையாக நில்லாமல், எல்லாத் திசைகளிலும் தொடர்ந்து முடிவின்றி ஒழுங்கற்ற முறையில் இங்குமங்குமாக இயங்கும். 3. வளிமூலக்கூறுகள் இயங்கும் போது ஒன்றுடன் மற்றொன்றும் மோதிக் கொள்வதோடு, மேலும் கலன்களின் சுவர்களிலும் மோது கின்றன. 4. வளிமூலக் கூறுகள் மீள்தன்மை உடையவை. ஆகவே மோதல் காரணமாக, அவற்றில் இயக்க ஆற்றல் இழப்பில்லை. 5. வளி மூலக்கூறுகள் கலன் சுவர்களில் விசையுடன் மோதுவதால் ஏற்படு விளைவே வளியழுத்த மாகும். 6. வளிமூலக்கூறுகளின் இயக்க ஆற்றல், வளி வெப்ப நிலையுடன் நேர்வீதத் தொடர்பு டையது. 7 வளிநிலையில் மூலக் கூறுகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவு கவர்ச்சி இல்லை. ஆதலால், மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி இயங்குகின்றன. 8. வளியுள்ள கலப்பருமனோடு ஒப்பிடும் போது, மூலக்கூறுகளின் பருமன் மிகக்குறைவு. ஆதலால், அதைப் புறக்கணிக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "motion, laws of gases of", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 278"}]}}