{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/thsqyd98/", "data": {"id": "thsqyd98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/thsqyd98/", "kind": "article", "headword": "அசிசி", "romanization": "acici", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.004537+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அசிசி என்னும் நகரம் இத்தாலியில் அம்பிரியா (Umbria) பகுதியில் பெரூசியா (Perugia) மாநிலத்தில் உள்ளது.", "body_ta": "அசிசி என்னும் நகரம் இத்தாலியில் அம்பிரியா (Umbria) பகுதியில் பெரூசியா (Perugia) மாநிலத்தில் உள்ளது. பெரூசியாவிற்கு 24 கி.மீ. தென்கிழக்கில் அசிசி (Assisi) அமைந்துள்ளது, சுபாசியோ (Subacio) மலை முகட்டில் 400 மீ. உயரத்தில் அமைந்துள்ள இந்நகரத்திலிருந்து தைபர் (Tiber), தோபினோ (Topino) ஆறுகளைக் கண்குளிரக் காணலாம். இங்குச் சணல், தேனிரும்புப் பொருள்கள், செயற்கை உரங்கள், விசைக் குழாய்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனையொட்டியுள்ள பகுதியில் ஒலிவத் (Olive) தோட்டங்களும், கனிப்பொருள் ஊற்றுகளும் (Mineral springs) உள்ளன.\n\nபிரான்சிசுகன் மடாலய முறையை (Franciscan Order) உருவாக்கிய பிரான்சிசு முனிவர் (St. Francis) இவ்வூரில்தான் பிறந்தார். இங்கு, இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டையொன்று உள்ளது. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நகரின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஒன்றுமில்லையெனலாம். இங்கு உள்ள பெர்டோனோ-டி-அசிசி (Perdono-de-Assisi) என்னும் பயணத்தலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிரான்சிசு முனிவர் கட்டிய திருச்சபை இந்நகரின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. அசிசியின் மக்கள் தொகை ஏறத்தாழ 20,000 ஆகும் (1980).\n\nஅசிசியில் உள்ள திருச்சபை"}}