{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t44bfzpe/", "data": {"id": "t44bfzpe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t44bfzpe/", "kind": "word", "headword": "சேஷாசல அய்யர். டி.என்", "romanization": "cēṣācala ayyar. ṭi.eṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.077027+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சைவ சமயத்தவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். தமிழில் நல்ல அறிவு படைத்தவர். கலா நிலையம் பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் அறிஞர்கட்கு நல்ல விருந்தாகும். பிஜாரோ என்னும் நாடக நூலையும், ஜூலியஸ்ஸீசர் என்னும் நாடக நூலையும், ஏமாங்கத நாட்டு இளவரசன் என்னும் நூலையும் எழுதியவர். ஆங்கிலத்திலும் கம்பரைப்பற்றி நூல் எழுதியுள்ளார். ஏமாங்கத நாட்டு இளவரசன் என்னும் உரைநடை நூல் உயர்ந்த செந்தமிழ் நடையால் ஆனது. கம்பராமாயணத்தில் அதிக ஈடுபாடு உடையவர். அது பற்றிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆங்கில வகுப்புக்களையும் தமிழ் வகுப்புக்களையும் நடத்திப் பலரை அறிஞர் ஆக்கினவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 640"}]}}