{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sy998yvp/", "data": {"id": "sy998yvp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sy998yvp/", "kind": "word", "headword": "தீக்கை,தீட்சை", "romanization": "tīkkai,tīṭcai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:22.789582+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது. நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) முன்னிலையில் நின்று அருளுதல் - பிரளயாகலர் 3) படர்க்கையில் நின்று அருளுதல் - சகலர். முதல் இரண்டும் நேரே செய்யப்படுபவை. நிராதர தீக்கை என்று பெயர் பெறும் மூன்றாவது மறைமுகமாகச்செய்வது. இதற்குச்சாதார தீக்கை என்று பெயர். ::வகை - மூன்று 1) சமயத் தீக்கை; சரியை பொருட்டுச் செய்யப்படுவது. மந்திரங்களுக்குரியது கிடைப்பது உருத்திரபாதம். 2) சிறப்புத் தீக்கை, கீரியை, யோகம், பூசை ஆகியவை பற்றிச் செய்யப்படுவது. 3) ஞான தீக்கை வேறு பெயர் நிருவாண தீக்கை. கிடைப்பது மகேசுர பாதம். ஞானகுரு ஞானத்தை உணர்த்தும் முறை. இரண்டு; 1) தன்வயமாய்ச் செய்வது 2) தன்வயமில் லாமல் செய்வது. தீக்கை ஏழு; - 1) திருநோக்கத் (அருள்) தீக்கை. 2) தொடு (பரிச) தீக்கை 3) மொழித்தட வாக்கு தீக்கை 4) பாவனைத் மாணத தீக்கை 5) நூல் வழிச் சாத்திர தீக்கை 6) யோக தீக்கை 7)அவுத்திரி தீக்கை சிறந்தது அவுத்திரி தீக்கையே. இது ஒமத்தால் செய்யப்படுவது. இது ஞானாவதி கிரியாவதி, நிர்ப்பீசம், சுபீசம் என 4 வகை ::விளக்கம் 1) ஞானாவதி; குண்டலம் முதலியவற்றை உள்ளத்தில் கற்பித்துச் செய்வது. 2) கிரியாவதி; புறத்தே குண்டலம் முதலியவற்றைக் கொண்டு செய்வது. 3) நிர்ப்பீசம்; சிவனோடு சாமியமான முத்தி கிடைக்கும். பாலர், வாலீசர், விருத்தர் பணிமொழியார், பல போகத்தவர், நோயுற்றோர் முதலியோருக்குச் செய்யப்படுவது. நைமிகத்தும் காமிகத்தும் அதிகாரம் கெடாது. வேறு பெயர் நிராதர தீக்கை, நிருவாண தீக்கை. நிருவாண தீக்கையம் அசத்திய நிருவாணம் (தேகமுத்தியைப் பயக்குவது) சத்திய திருவாணம் (உடன் முத்தியைப் பயக்குவது ) என இருவகை 4) சபீச தீக்கை; மலபரிபாகம், கற்றறிவு ஆகிய இரண்டும் உடைய சாதாகசாரியார்க்குச் செய்யப்படுவது. நித்திய நைமித்திக் காமியத்தில் நிரம்ப அதிகாரம் தருவது. வேறுபெயர் சாதார தீக்கை. இத்தீக்கை உடையோர் அதன் வேறு பாட்டால் சாதகர், ஆசாரியர் என இருவகைப் படுவர். கிடைப்பது சிவபதம். ::கபீச தீக்கையின் வகை 1) உலோக தருமிணி; இல்லற முடையவருக்குச் செய்யப்படுவது. வேறு பெயர் பெளதிகத் தீக்கை. 2) சிவதருமிணி; துறவுடையோருக்குச் செய்யப்படுவது. வேறு நைட்டிகத்தீக்கை சமய விசேடம் நிருவாணம் பெயர் அபிடேகம் ஆகிய மூன்றும் நிர்ப்பீசம் சபீசம் ஆகிய இரண்டில் அடங்கும். சாம்பவதி தீக்கை; இது மற்றுமொரு தீக்கை. சிவசீவகர் களுக்குச் செய்யப்படுவது. இதில்கொள்ளவேண்டியவை; 1) இயம நியமங்கள் 2) சந்தியா வந்தனம் 3) சிவலிங்கபூசை 4) அக்கினி காரியங்கள் 3) குரு வசன பரிபாலனம் 6) மகேசுர பூசை தள்ள வேண்டியவை; சிவநிந்தை, சிவ சாத்திர நிந்தை, உயிர்க்கொலை முதலியவை. பொதுப் பயன்; உயிர்கள் மலம் நீங்கிச் சிவதத்துவம் பெற உதவுவது. அல்லது அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானம் தருவது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 163"}]}}