{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/swacfvyf/", "data": {"id": "swacfvyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/swacfvyf/", "kind": "article", "headword": "சிலந்தி வலைச் சவ்வு", "romanization": "cilanti valaic cavvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:54.955270+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மூளையும், தண்டு வடமும் வெளியிலிருந்து உள்ளாக மூன்று உறைகளால் ஆனவை.", "body_ta": "மூளையும், தண்டு வடமும் வெளியிலிருந்து உள்ளாக மூன்று உறைகளால் ஆனவை. அவை கடினமான வெளி உறை (duramater), சிலந்தி வலை போன்ற உறை (arachnoid mater), மென்மையான உள்ளுறை (pia mater) எனப்படும்.\n\nகடின உறை பருமனாகவும், நாரிழையாகவும் இருக்கும். இது கபால எலும்புகளுக்கு உள்ளுறை போன்று உள்ளது. மென்மையான உறை, அகத் தோல் (endothelium) செல்கள் கொண்ட ஒரு மெல்லிய உறை ஆகும். இவ்விரு உறைகளுக்கும் இடையேயுள்ளதைச் சிலந்தி வலைச் சவ்வு என்பர். சிலந்தி வலை உறைக்கும்,மென் உறைக்கும் இடையேயுள்ள இடம் சிலந்தி வலை அடிவெளி ஆகும். இந்த இடைவெளியில்தான் பெருமூளைத் தண்டு வட நீர் உள்ளது. இதன் விரிவுப் பகுதிகளைச் சிலந்தி வலை அடித் தொட்டி (cisterns) எனலாம். இது போன்றே, கடின உறைக்கும், சிலந்தி வலைச் சவ்வுக்கும் இடையேயுள்ள வெளியை, கடின உறை அடி வெளி (subdural space) எனலாம். —அ. கதிரேசன் நூலோதி. Lord Brain, Brain's Diseases of the Nervous System, Seventh Edition, ELBS & Oxford University Press, London, 1969."}}