{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/suhgt4k2/", "data": {"id": "suhgt4k2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/suhgt4k2/", "kind": "article", "headword": "அசுட்டோரியா", "romanization": "acuṭṭōriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.123813+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளதோர் நகர்.", "body_ta": "அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளதோர் நகர். இது கொலம்பியா ஆற்றின் நுழை வாயிலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகப்பட்டினமாகும். இது ஒரேகான் மாநிலத்தின் வடமேற்கில் இருக்கும் கிளாட்சாபு மாவட்டத்தின் (County) தலைநகராகும். மீன் பிடித்தல், அவற்றைப் பெட்டிகளில் அடைத்தல், மரமறுத்தல், கப்பற்கட்டுதல் போன்றவை அசுட்டோரியாவின் சிறப்பான தொழில்களாகும்.\n\nசான் சாகப் அசுட்டர் என்பவர் கி.பி. 1811-ஆம் ஆண்டில் இங்கு ஒரு குழுவினை அனுப்பி, மென்யிருடன் கூடிய மெல்லிய தோல் வாணிக மையத்தை ஏற்படுத்தினார். அசுட்டர் என்பாரின் பெயரே அசுட்டோரியா நகரின் பெயராயிற்று. இராக்தி மலைத் தொடருக்கு மேற்கில் முதன் முதலாக நிலைநாட்டப் பெற்ற அமெரிக்கச் குடியேற்றம் (Colony) இதுதான். மக்கள் தொகை 10,244."}}