{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sq5wyuyr/", "data": {"id": "sq5wyuyr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sq5wyuyr/", "kind": "article", "headword": "காற்றாலை", "romanization": "kāṟṟālai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:26.519338+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "காகிதத்தால் அல்லது பனை ஓலையால் குறுக்கும் நெடுக்குமாகச் செய்யப்பட்ட சிறிய காற்றாடிகளைப் பார்த்திருக்கலாம்.", "body_ta": "காகிதத்தால் அல்லது பனை ஓலையால் குறுக்கும் நெடுக்குமாகச் செய்யப்பட்ட சிறிய காற்றாடிகளைப் பார்த்திருக்கலாம். அதை காற்றடிக்கும் திசைக்கு நேராகக்\n\nகாட்டினால் விரைந்து சுற்றும். காற்றின் வேகத்திற்கேற்ப காற்றாடி சுழலும். இதே போன்று அமைக்கப்படுவதுதான் காற்றாலைகள். இதில் உள்ள காற்றாடிகள் மிகப் பெரியவையாக இருக்கும்.\n\nகாற்றாலைகளுக்குப் புகழ்பெற்ற நாடு நெதர்லாந்து ஆகும். இந்நாட்டின் பெரும்பகுதி கடல் மட்டத்திற்குக் கீழாக அமைந்திருப்பதால்\n\nகடல்நீர் பள்ளமான தரைப்பகுதியை நோக்கி வருவது தவிர்க்க முடியாததாகிறது. இவ்வாறு வரும் கடல்நீரை இடைவிடாமல் இறைப்பதற்கென நெடுங்காலத்திற்கு முன்பாகவே இத்தகைய பெரிய பெரிய காற்றாலைகளை அமைத்துள்ளார்கள்.\n\nகாற்றாலைகளில் விசிறி வடிவில் உள்ள காற்றாடிகள் உயரமான தூணின் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும். காற்றாடி ஒரு சக்கரத் துடன் இணைக்கப்பட்டிருக்கும். அச்சக்கரம் தூணின் அடிப்பாகத்தில் உள்ள எந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். காற்றினால் காற்றாடி சுழலும்போது சக்கரமும் அதனுடன் இணைந்துள்ள எந்திரமும் இயங்கும். அப்போது எந்திரம் நீரை இறைக்கும். நீர் இறைக்க வேண்டிய அவசியமில்லாதபோது காற்றாடியால் இயங்கும் எந்திரத்தைக் கொண்டு மாவு அரைக்கப்படுகிறது.\n\nதிறந்த வெளிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தியும் சிறிய அளவில் செய்யப்படுகிறது.\n\nஇன்று தமிழ் நாட்டிலும் நன்கு காற்று வீசக் கூடிய மேடான பகுதிகளில் இத்தகைய காற்றாலைகள் மின் உற்பத்திக்கென அமைக்கப்பட்டு வருகின்றன.\n\nகாற்று ஒரே திசையில் அடிப்பதில்லை. மாறி மாறி காற்று வீசும். எனவே, அவ்வப்போது காற்று வீசும் திக்குக்கு எதிரான திசையில் காற்றாடிகளைத் திருப்பி வைக்க வேண்டுவது அவசியமாகும்.\n\nகாற்றாலைகள் பல்வேறு வடிவினவாகும்."}}