{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/skqkmjb8/", "data": {"id": "skqkmjb8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/skqkmjb8/", "kind": "word", "headword": "மனோன்மணியம்", "romanization": "maṉōṉmaṇiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.017758+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது நாடக நூல். பெரிதும் ஆசிரியப்பாவால் ஆனது. வேற்றுப் பாக்களும் சில உண்டு. இது ஆங்கில நூலின் நாடக அமைப்பு முறையில் களம், அங்கம், முதலிய உறுப்புகளைக் கொண்டது. இதில் கடவுள் வாழ்த்துத் தமிழ்த் தாய் வாழ்த்து. அதன் மூலம் தமிழின் பெருமை திறம்படக் கூறப்பட்டுள்ளது. அக்கடவுள் வாழ்த்தில் கன்னடம்,தெலுங்கு, மலையாளம், முதலான மொழிகள் தமிழ்மொழியின் சேய்கள் என்பதையும், தமிழ்மொழி அவற்றின் தாய் என்பதையும் குறித்திருப்பதை நன்கு தெரியலாம். இதில் உள்ள சிவகாமி சரிதை படித்து இன்புறுதற் குரியது. இந்நூல் முழுமையும் ஆங்கில நூலைத் தழுவி எழுதப்பட்டது. ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. காலம் 19ஆம் நூற்றாண்டு. தாவரத்தைப் பற்றியும், வாய்க்காலைப் பற்றியும், நாங்கூழ்ப் புழுவைப் பற்றியும் கூறும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 540"}]}}