{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s8uycx7w/", "data": {"id": "s8uycx7w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s8uycx7w/", "kind": "article", "headword": "செவிப் பறை தடித்தல்", "romanization": "cevip paṟai taṭittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.214520+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செவிப் பறை இயல்பாக முத்துப் போன்ற நிறத்தில் இருக்கும்.", "body_ta": "செவிப் பறை இயல்பாக முத்துப் போன்ற நிறத்தில் இருக்கும். அதிலுள்ள நார்த் திசுக்களில் கால்சியம் உப்புச் சேர்ந்து கொள்வதால், ஒரு விதப் பனிப் படலம் வெண்மையாக உறைந்து விடுகிறது. நடுச் செவி மித அழற்சியால் அங்குச் செல்கள் உறைந்து விடுகின்றன. இதனால், சிற்றெலும்புகளின் தொடர் நிகழ்ச்சி பாதிக்கப்பட்டுச் செவிட்டுத் தன்மை தோன்றினால், அறுவை செய்து செவிப் பறையின் உள் பகுதி வழியாக இந்தத் திசுக்களை அகற்றி விடலாம். —டி.எம்.பரமேஸ்வரன்"}}