{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s745gtcj/", "data": {"id": "s745gtcj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s745gtcj/", "kind": "article", "headword": "சுருள் கம்பி", "romanization": "curuḷ kampi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.050715+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு மின் சுற்றில் மின் தூண்டலை ஏற்படுத்த ஒன்று அல்லது பல சுற்றுக ளின் எண்ணிக்கை கொண்ட சுருள் கம்பி (coil Wire) பயன்படுகிறது, மின் பாதைகளிலும், கேட்பு அலைகளிலும், ஒரு சுருளின் மின் கடத்தாப் பொருள்களாலான காப்பிடப்பட்ட பல கம்பிச் சுற்றுகள் உண்டு.", "body_ta": "ஒரு மின் சுற்றில் மின் தூண்டலை ஏற்படுத்த ஒன்று அல்லது பல சுற்றுக ளின் எண்ணிக்கை கொண்ட சுருள் கம்பி (coil Wire) பயன்படுகிறது, மின் பாதைகளிலும், கேட்பு அலைகளிலும், ஒரு சுருளின் மின் கடத்தாப் பொருள்களாலான காப்பிடப்பட்ட பல கம்பிச் சுற்றுகள் உண்டு. மையத்தில் இரும்பு உள்ளகம் செல்கிறது. இது அடை (choke) எனப்படும். மாறு திசை மின்னோட்டத்திற்கு, இது மிகுந்த தடையை அளிக்கிறது. நேர் திசை மின்னோட்டத்தை அனுமதிக்கிறது.\n\nஉயர் மின் அலைகளில் கம்பிச் சுருள் பொடி செய்யப்பட்ட இரும்பு உள்ளகத்தில் இருக்கும் அல்லது உள்ளகமே இல்லாமல் இருக்கும்., சுருள் கம்பியின் மின் அளவு மின் தூண்டல் எனப்படும். இது ஹென்றிகளிலும், மில்லி ஹென்றிகளிலும் குறிப்பிடப் படுகிறது. சுருள் கம்பி மின் தடையோடு சேர்ந்து மாறு திசை மின்னோட்டத்திற்கு எதிர்ப்பையும் அளிக்கிறது. இது மின் மறுப்பு எனப்படும். இது ஓம் அலகால் கூறப்படுகிறது. மின் அலைகளின் அதிர்வு மிகும் போது, சுருள் கம்பியின் மின் மறுப்பும் மிகுதியாகிறது. சுருள் கம்பிகள் செம்பினால் செய்யப்படுகின்றன. அலுமினியச் சுருள் கம்பிகளும் உள்ளன. —மா. தாயுமானசாமி நூலோதி. B.L. Theraja, Basic Electronics Solid State, Second Edition, S.Chand and Company Pvt. Ltd, New Delhi, 1987."}}