{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s64yb6ry/", "data": {"id": "s64yb6ry", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s64yb6ry/", "kind": "article", "headword": "அறுகை", "romanization": "aṟukai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.046512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அறுகை ஒரு குறுநில மன்னன்; சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் ; பழையன் என்னும் மோகூர் மன்னனுக்குப் பகைவன்.", "body_ta": "அறுகை ஒரு குறுநில மன்னன்; சேரன் செங்குட்டுவனுக்கு நண்பன் ; பழையன் என்னும் மோகூர் மன்னனுக்குப் பகைவன். மோகூர் மன்னனுக்கு அஞ்சிப் பதுங்கியிருந்த அறுகைக்குதவி செய்வதற்கு, மோகூர் மன்னனைச் சேரன் செங்குட்டுவன் வென்று, அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டி, வெற்றி முரசையுங் கைக்கொண்டான் (பதிற். 44)."}}