{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s5z6p9ps/", "data": {"id": "s5z6p9ps", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s5z6p9ps/", "kind": "article", "headword": "பகிர்வான்", "romanization": "pakirvāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.577373+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உட்கனல் பொறிகளில் பயன் படுத்தப் படும் ஒரு சுழல் இணைப்பு மாற்றி (rotary switch), பகிர்வான் (distributor) எனப் படும்.", "body_ta": "உட்கனல் பொறிகளில் பயன் படுத்தப் படும் ஒரு சுழல் இணைப்பு மாற்றி (rotary switch), பகிர்வான் (distributor) எனப் படும். இவ்விணைப்பு மாற்றி, உயர் அழுத்தமூட்டல் மின்னோட்டத்தை (ignition–current), பொறியின் அனைத்து உருளைகளுக்கும், சரியான எரியும் வரிசையில் (firing sequence) வழிப் படுத்துகிறது. பகிர்வான் தொகுப்பில் அனைத்து உருளைகளிலும், உந்துகளும் (pistons) சுழற்சிக்கு ஏற்ற நிலையில் இருக்கும் போது , மூட்டல் நேரத்தைக் குறிக்கும் ஒரு கருவியைத் தானியங்கி முறை கொண்டிருக்கும். இக்கருவி பிரிப்புப் புள்ளிகள் (breaker points) எனப் படும். நெம்புருளால் இயக்கப் படும் (cam–operated) தொடு முனைகளைக் கொண்டிருக்கும். இத்தொடு முனைகள் எரிமூட்டல் துடிப்புகளை (pulse) விசைப் படுத்தும் (triggers) திறப்புகளைக் கொண்டன. பொறிகள் உயர் வேகத்தில் இயங்கும் போது, பிரிப்புப் புள்ளிகள் திறக்கும் நேரம் முன்னதாக அமைக்கப் படுகிறது. இது பிரிப்பியின் நெம்புருள் தண்டினால் இயக்கப் படும் சிறு எடைகளின் மைய விலக்கு விசையால் ஏற்படுகிறது. இந்த நேரம், பொறிகளின் சுமையைப் பொறுத்தும் மாறுபடுகிறது. இம்மாறுபாடு உட்கொள் பெருங்குழலில் (in–take manifold) பிரிசுவரின் (diaphragm) அசைவுகளால் ஏற்படுகிறது. —வா. அனுசுயா"}}