{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s45a9p96/", "data": {"id": "s45a9p96", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s45a9p96/", "kind": "word", "headword": "இலிங்கத்தத்துவம்", "romanization": "iliṅkattattuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:05.966973+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலிங்கம் ஒர் அடையாளம் அல்லது குறியை உணர்த்துவது. சைவ இலக்கியத்தில் எதனுள் யாவும் ஒடுங்குகின்றனவோ அது இலிங்கம் ஆகும். வேள்வி வழக்கில் யோனி என்பது யக்ஞ குண்டத்தையும் இலிங்கம் அதனின்று எழும் தீயையும் குறிக்கும். யோகப் பயிற்சியில் ஆறு ஆதார சக்கரங்கள் யோனி எனக் கொள்ளப் பெறும். அவற்றுள் எழும் ஒளி இலிங்கம் ஆகும். அளவை இயலில் கருதல், இலிங்க பராமரிசத்தை அடிப்படையாகக் கொண்டது. இலிங்க பராமரிசம் - குறி ஆராய்ச்சி (சிவஞான முனிவர்) இலிங்கம் ஓங்காரத்தைக் காணுவதற்குரிய அறிகுறி. அகர, உகர, மகரங்களின் சேர்க்கை. இலிங்கத்தின் அடிப்புறத்தைப் பிரம்மாவாகவும் நடுப்புறத்தைத் திருமாலாகவும் மேற்புறத்தைச் சிவனாகவும் கூறுவது மரபு. இலிங்கம் உருவாயும் அருவாயும் அருஉருவாயும் உள்ளது. இலிங்கம் சைவ சமயத்திற்கு மட்டுமல்லாது அனைத்துச் சமயத்திற்கும் உரியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 63"}]}}