{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s3urmfaa/", "data": {"id": "s3urmfaa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s3urmfaa/", "kind": "word", "headword": "விஷுவல் பேசிக்", "romanization": "viṣuval pēcik", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.291361+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விஷ\"வல் பேசிக் என்னும் பெயரில் விஷூவல் என்பது வரைகலை பயனாளி இடை முகத்தை (கிராபிகல் யூசர் இண்டர்பேஸ், ஜியூஐ) உருவாக்குவதைக் குறிக்கும். பேசிக் என்பது பேசிக் மொழியைக் குறிப்பது. கணித்தல் வரலாற்றில் இம்மொழியே அதிகம் பயன்படுவது. விஷூவல் பேசிக் என்பது மூல பேசிக் மொழியிலிருந்து உருவானது. தற்பொழுது இது பல நூறு கூற்றுகள், சார்பலன்கள், திறவுச் சொற்கள் முதலிய வற்றைக் கொண்டது. விஷுவல் பேசிக் பயன்பாட்டிலுள்ள பயனாளி இடைமுகத்தில் அடிப்படைக் கூறுகள், படிவங்களும் கட்டுப்பாடுகளும் ஆகும். இவை பொருள்கள் எனப்படும். இவை அன்றாடம் நாம் வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்கள் போன்றவையே. ஏனைய பருப்பொருள்கள் போலவே இவற்றிற்குப் பண்புகள் உண்டு புற நிகழ்வுகளுக் கேற்பத் துலங்குபவை. விஷுவல் பேசிக் இடைமுகத்தில் படிவம், கருவிப்பட்டை கருவிப்பெட்டி, பட்டிப்பட்டை, புராஜெக்ட் எக்ஸ்புளோரர் (திட்ட ஆராய்வி), புராபர்ட்டிஸ் விண்டோ (பண்புச் சாளரம்) ஆகியவை உண்டு. நேரடி உதவி வசதிகள் மூலம் விஷுவல் பேசிக்கைப் பொறுத்த என்வினாவிற்குரிய விடையையும் பெறலாம். தற்பட்டி உறுப்புகள், தன் விரைவுத் தகவல் ஆகிய இரண்டும் மிகப்பயனுள்ளவை. விஷூவல் பேசிக் இவ்விரண்டையும் கொண்டது.", "needs_definition": false, "gloss_en": "Visual Basic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}