{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/s377jyzt/", "data": {"id": "s377jyzt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s377jyzt/", "kind": "article", "headword": "உகில், மேக்சு", "romanization": "ukil, mēkcu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.941001+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென் அமெரிக்கத் தொல்லியல் அறிஞர், உகில், மேக்சு (Uhle, Max) கி.பி.", "body_ta": "தென் அமெரிக்கத் தொல்லியல் அறிஞர், உகில், மேக்சு (Uhle, Max) கி.பி. 1856–இல் பிறந்தார். இவர் ஆண்டியன் நாகரிகத்தை ஆய்ந்தவர். மண்ணடுக்காய்வு (Stratigraphy) முறையில் ஆண்டியன் நாகரிகத் தொன்மைப் பொருள்களைப் பிரித்து, வரிசைப்படுத்திக் காலத்தைக் கணித்தபெருமை இவரையே சாரும். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் விரிவாகப் பல கள ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் தியாகுயனாகோ (Tiahuanaco) என்னும் தொன்மை நகரத்திற்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்; மோசிகா (Mochica) நாகரிகத் தொடர்புடைய பல்வேறு பகுதிகளையும் பச்சாகாமக்கு (Pachacamac) என்னும் நகரத்தையும் அகழாய்வு செய்தார். இவர் சிஞ்சா (Chincha), அவ்கா (Ica) பள்ளத்தாக்குகளில் அகழாய்வுகள் மேற்கொண்டு, தொன்மை மிக்க நாசுகா (Naska) என்னும் மட்கலன்களைக் கண்டெடுத்தார். பிற்காலத்தில் தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளிலும் சிலி, ஈக்வடார்ப் பகுதிகளிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் தம் ஆய்வுகளின் மூலம் சேகரித்த செய்திகளைக் கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார். இக்குறிப்புகளைப் பல்வேறு அறிஞர்கள் பிற்காலத்தில் படித்துப் பல ஆய்வுப் புத்தகங்களை வெளியிட்டனர். இவர்தம் ஆய்வுக் குறிப்புகளைப் படித்து ஆய்ந்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் குரோபர் (Kroeber) ஆவார். உகில்மேக்சு 1944–ஆம் ஆண்டு காலமானார்."}}