{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rwyp84n2/", "data": {"id": "rwyp84n2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rwyp84n2/", "kind": "word", "headword": "ஆர்க்கி", "romanization": "ārkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.694040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெயர் கொடா கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மூலம் இலவச ஆவணக்காப்பகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளைத் தேடிக் கண்டறியும் இணையப் பயன்பாடு. மான்ட்ரீல் நகரின் மெக்கில் (McGill) பல்கலைக்கழகத்திலுள்ள தலைமை ஆர்க்கி வழங்கன் கணினி, தன்னுடன் இணைக்கப்பட்ட கோப்புப் பரிமாற்ற நெறி முறை அடிப்படையிலான அனைத்து வழங்கன் கணினிகளிலிருந்தும் கோப்புப் பட்டியல்களைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை ஒன்றிணைத்து ஒரே பட்டியலாக்கி, அப்பட்டியலை அனைத்து ஆர்க்கி வழங்கன் கணினிகளுக்கும் நாள்தோறும் அனுப்பி வைக்கிறது. ஆவணக் காப்பகம் என்று பொருள்படும் ஆர்க்கிவ் என்ற சொல்லின் சுருக்கமே ஆர்க்கி ஆகும்", "needs_definition": false, "gloss_en": "Archie", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 88"}]}}