{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rfzpfsk2/", "data": {"id": "rfzpfsk2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rfzpfsk2/", "kind": "word", "headword": "மங்கல வாழ்த்து", "romanization": "maṅkala vāḻttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:33.202342+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடவுள் வணக்கம். நூல் செய்யும் ஆசிரியர் நூல் இனிது முடிய முதற்கண் கடவுளை வாழ்த்துவதும் அதன்பின் நூலைத் தொடங்குவதும் மரபு. இம் மரபுப்படி சிவஞான போதத்திற்கும் மங்கல வாழ்த்து அமைந்துள்ளது. தமிழ் நூல்களுள் முதன் முதலில் மங்கல வாழ்த்துக் கூறுவதாக அமைந்தது சிவஞான போதமே. நூலினுள் கூறப்படும் பொருள் பாகுபாடு பற்றிய குறிப்பைத் தன்னகத்தே அடக்கி நிற்றல் மங்கல வாழ்த்துக்கு இலக்கணம். இவ்விலக்கணத்தைச் சிவஞானபோதம் முழுவதும் பெற்றுள்ளது. இதில் விளக்கப்படும் அனைத்துப் பாகுபாடுகளும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}