{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rf3hx4fa/", "data": {"id": "rf3hx4fa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rf3hx4fa/", "kind": "word", "headword": "சார்புப் பாதை", "romanization": "cārpup pātai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.147102+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டாஸ், யூனிக்ஸ் இயக்க முறை மைகளில் பயன்படும் சொற்றொடர். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கோப்பகத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் கோப்பகப் பாதை. பயனாளர், ஒரு கோப்பு தொடர்பான கட்டளையைக் கொடுக்கும்போது, முழுப் பாதையும் கொடுக்கவில்லை எனில், நடப்புக் கோப்பகம் சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். C : \\WORK>DEL C : \\TC\\PRG\\ TEST. C என்ற கட்டளையில் TEST. C என்னும் கோப்பு இருக்கும் முழுப்பாதையும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், C : \\WORK> DEL TEST. C என்னும் கோப்பு WORK கோப்பகத்தில் உள்ளது எனப்பொருள்படும். C : \\WORK> DEL PRG\\TEST. C என்ற கட்டளை அமைத்தால், WORK-லிலுள்ள PRG என்னும் உள்கோப்பகத்திலுள்ள TEST. C என்று பொருள்படும். C : \\WORK> DEL TC\\PRG\\ TEST. C என்ற கட்டளையும் C : \\WORK\\TC\\PRG\\ TEST. C என்ற கோப்பினையே குறிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "relative path", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1239"}]}}