{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ra52tvpj/", "data": {"id": "ra52tvpj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ra52tvpj/", "kind": "article", "headword": "அலெக்சாந்தர் ஆர்ச்சிபென்கோ", "romanization": "alekcāntar ārccipeṉkō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.637991+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 1887-1964 ஆகிய காலத்தில் வாழ்ந்த சிற்பிகளில் தலைசிறந்தவர்; திடமாகவும் திடமற்றதாகவும் வரையப்பெற்ற மானிட உருவத்தை இணைத்த பெருமை இவரையே சாரும்.", "body_ta": "கி.பி. 1887-1964 ஆகிய காலத்தில் வாழ்ந்த சிற்பிகளில் தலைசிறந்தவர்; திடமாகவும் திடமற்றதாகவும் வரையப்பெற்ற மானிட உருவத்தை இணைத்த பெருமை இவரையே சாரும். இவரது சிற்பக் கலைப்பாணியை இவர் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இவர் பயன்படுத்திய திடப்பொருள்களையும் திடமற்ற பொருள்களையும் புதிய சிற்பிகளில் பலர் பயன்படுத்தும் செல்வாக்கிற்குட்பட்டனர். இவர் உருவாக்கிய சிற்ப உருவங்கள் உட்புறம் வளைந்தவை; வெளிப்புறம் வளைந்தவை யாவும் கோணவடிவங்களாக இருக்கின்றன.\n\nஉருசியாவில் உக்ரேன் பகுதியில் கீவ் என்ற ஊரில் பிறந்தவர் ஆர்ச்சிபென்கோ. 1923–இல் அமெரிக்கக் குடிமகனானார். ஐரோப்பா, அமெரிக்காக் கண்டங்களில் நுண்கலைப் பள்ளிகளை நிலைநாட்டியவரும் இவரே. அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இவர் பலருக்கு நுண்கலைகளைக் கற்பித்தார்."}}