{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r6fpetjc/", "data": {"id": "r6fpetjc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r6fpetjc/", "kind": "article", "headword": "ஆஸ்பொடெல்", "romanization": "āspoṭel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.039321+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆஸ்பொடெல் (Asphodel) லில்லி குடும்பத்தைக் சேர்ந்த பூ.", "body_ta": "ஆஸ்பொடெல் (Asphodel) லில்லி குடும்பத்தைக் சேர்ந்த பூ. இந்தியாவில் இது உண்டு. உரமான செடி. இதில் தண்டு வளர்வதில்லை. பூமியின் கீழ் வேர் தடித்து இருக்கும். இலைகள் மெல்லியவையாகக் குறுகி நீண்டிருக்கும். கொத்தாக வளரும். பூக்கள் எக்காளம் போல் வடிவுள்ளவை. நீண்ட பூங்கொத்துக்கள் உண்டு. பூக்கள் பொதுவாக மஞ்சளான நிறமுள்ளவை. இதை இறத்தல், இடுகாடு முதலியவற்றோடு சம்பந்தப்படுத்துவது கிரேக்கக் கவி மரபு. அமரில்லிடேசீ குடும்பத்தைச் சேர்ந்தது. நார்சிஸ்ஸஸ் என்னும் டாபொடில் செடியும் ஆஸ்பொடல் எனப்படும்."}}