{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qzsvdg9f/", "data": {"id": "qzsvdg9f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qzsvdg9f/", "kind": "article", "headword": "அசுக்காபாத்து", "romanization": "acukkāpāttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.110613+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோவியத் உருசியாவில் தர்க்குமெனிசுதான் (Turkmenistan) குடியரசின் தலைநகரம்.", "body_ta": "சோவியத் உருசியாவில் தர்க்குமெனிசுதான் (Turkmenistan) குடியரசின் தலைநகரம். இதன் பழைய பெயர் போல்டோராட்சுகு (Poltoratsk) என்பதாகும். தர்க்குமெனிசுதான், சார்தோசு (Chardzhou), மெரூய் (Maruy), அசுக்காபாத்து (Ashkhabad), தசுவாசு (Tashauz), கிராசுநோவட்சுகு (Krasnovodsk) என்று ஐந்து பகுதிகளாகப் பிரிந்துள்ளது. அசுக்காபாத்தின் மக்கள் தொகை 3,25,000 ஆகும். (1981). அசுக்காபாத்திலிருந்து ஈரான் நாட்டிலிருக்கும் மெசடு (Meshed} நகரம் வரை பேருந்துச் சாலை ஒன்று செல்கிறது. அசுக்காபாத்திலிருந்து செல்லும் விமான வழி, சோவியத்து நாட்டின் மேற்கு, வடக்கு, கிழக்குப் போன்ற தொலைதூரப் பகுதிகளை இணைக்கிறது."}}