{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qs77249a/", "data": {"id": "qs77249a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qs77249a/", "kind": "word", "headword": "மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல்", "romanization": "mēmpaṭṭa oruṅkiṇai iyakka miṉṉaṇuviyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.746080+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வட்டினை இயக்கக்கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடி வமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில்லாத வெடிப்புத் தரவு பரிமாற்றம்- நேரடித் தரவுஅணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8. 4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடீஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13. 3 எம்பி தரவு பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3. 3 எம்பி தான்). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றைவிட விலை மலிவானது.", "needs_definition": false, "gloss_en": "Enhanced Integrated Drive Electronics EIDE", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 535"}]}}