{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qhx6b5p3/", "data": {"id": "qhx6b5p3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhx6b5p3/", "kind": "word", "headword": "யுஆர்எல்", "romanization": "yuārel", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.176155+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரையும், வகைப்பெயரையும் மட்டுமே குறிப்பிடும் முறை. சிலவேளைகளில் கோப்பகப் பாதையில் ஒரு பகுதி கொடுக்கப்படலாம். நடப்புக் கோப்பின் பாதையிலிருந்து கொடுக்கப்பட்ட கோப்பின் பாதை சார்புப் பாதையாக எடுத்துக் கொள்ளப்படும். www. msn. com\\asp\\net. html என்ற கோப்பினைப் பார்வையிடும் போது, www. msn. com\\asp\\csharp \\ref. html எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக csharp\\ref. html என்று மட்டும் குறிப்பிடுவது சார்பு யுஆர்எல் எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "relative URL", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1240"}, {"n": 2, "definition_ta": "ஒரு சீரான வள இடங்காட்டி எனப் பொருள்படும் Uniform Resource Locator என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் வளம் ஒன்றின் இருப்பிடம் காட்டும் முகவரி. இணைய வளங்களைக் கண்டறிய உலாவிகள் இந்த முகவரியையே பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் யுஆர்எல், அவ்வளத்தை அணுகப் பயன்படும் நெறிமுறையின் பெயரைத் தொடக்கத்தில் கொண்டிருக்கும். வளம் சேமிக்கப்பட்டுள்ள வழங்கனின் பெயர் அடுத்து இடம் பெறும். அடுத்து களப் பிரிவு இடம் பெறுவதுண்டு. (எ-டு). http : //www. microsoft. com", "needs_definition": false, "gloss_en": "URL", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1509"}]}}