{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qhtr9mh2/", "data": {"id": "qhtr9mh2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhtr9mh2/", "kind": "word", "headword": "எழுத்துணர்தல்", "romanization": "eḻuttuṇartal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:01.318622+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியில் ஓர் எழுத்தை வெவ்வேறு எழுத்துருக்களில் (fonts) வெவ்வேறு பாணிகளில் (styles) (a : த : ஒ) பயன்படுத்துகிறோம். ஒரு தாளில் அச்சிடப்பட்ட எழுத்தை வருடுபொறி மூலம் வருடி கணினிக்குள் செலுத்தும்போது, கணினி அந்த எழுத்தை அடையாளம் கண்டுகொள்வதில் பிழை நேர வாய்ப்புண்டு. பிழையின்றி அறிய வேண்டுமெனில் எழுத்துகள் இந்த வடிவமைப்பில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சில கணினி அமைப்புகளில் உள்ளன. ஆனால் சில கணினிகள், தோரணி ஒப்பீட்டு (pattern matching) தொழில்நுட்ப அடிப்படையில் அமைந்த மென்பொருளின் உதவியுடன் எப்படிப்பட்ட வடிவமைப்பிலுள்ள எழுத்துகளையும் அடையாளம் கண்டுகொள்ளும்.", "needs_definition": false, "gloss_en": "character recognition", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எழுத்தறிதல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 242"}]}}