{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qgubmtdz/", "data": {"id": "qgubmtdz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qgubmtdz/", "kind": "word", "headword": "ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள்", "romanization": "srī caṅkarācāriya cuvāmikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.847790+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதுபோது காஞ்சி காமகோடி பீட ஆசாரிய சுவாமிகளாக விளங்குபவர். அரியசீலர். வடமொழியும் தென்மொழியும் நன்கு அறிந்தவர். பல இடங்கட்குக் கால்நடையாகவே செல்லும் தூய துறவு ஒழுக்கம் மேற்கொண்டவர். இவரது அரும் பெரும் கருணையினால் தான் சைவர்களும் வைஷ்ணவர்களும் ஒன்று சேர்ந்து திருவெம்பாவையையும் திருப்பாவையையும் பற்றி எங்கும் பேசவும், மாநாடுகளைக் கூட்டவும் நேர்ந்தது. இந்த அரிய செயலை எவரும் இதற்கு முன் செய்ததில்லை. எவர்க்கும் தரிசனம் தந்து தண்ணருள் சுரப்பவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 628"}]}}