{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qgcu64p8/", "data": {"id": "qgcu64p8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qgcu64p8/", "kind": "article", "headword": "உதயசங்கர் பட்டு", "romanization": "utayacaṅkar paṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.980357+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்தி எழுத்தாளர்களுள் ஒருவர்.", "body_ta": "20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்தி எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் புதினம், கவிதை, நாடகம், ஓரங்க நாடகம் முதலிய துறைகளில் புகழ் பெற்று விளங்கினார்; இக்கால இந்தி இலக்கியத்துக்குப் புத்துயிர் அளித்தார். இவர் நாடகங்களுள் சில மேனாட்டு நாடகக் கலையைப் பின்பற்றி எழுந்தவை. அந்நாடகங்கள் இந்தியப் பண்பாட்டையும் பண்டைய நாகரிகத்தையும் வெளிப்படுத்துகின்றன. இவருடைய நாடகங்கள் இக்கால வாழ்க்கையின் சிக்கல்களை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. இவர் படைப்புகளுள் ‘விக்கிரமாதித்ய’, ‘தாகர்’ போன்ற வரலாற்று நாடகங்களும், ‘அம்பா’, ‘சகர விசயம்’ போன்ற புராண நாடகங்களும் பழங்கால இந்திய நாகரிகத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. இக்காலச் சிக்கல்களை அறிந்துகொள்ள ‘கமலா’, ‘அந்த கீன் அந்து’ (எல்லையற்ற எல்லை), ‘நயா சமாசு’ (புது சமுதாயம்) முதலிய சமுதாய நாடகங்கள் பேருதவி புரிகின்றன. இவருடைய ஓரங்க நாடகத் தொகுப்புகளாக ‘மத்சய கந்தர்’, ‘விசுவாமித்ர’ முதலிய பல நூல்கள் வெளிவந்துள்ளன. நாவல் இலக்கியத்துள் ‘சாகர்’ ‘லகரேங் ஔர் மனுத்ய’ (கடல், அலை மற்றும் மனிதன்), ‘நயாமோட்’ (புதிய திருப்பம்) ஆகியன இவருக்கு அழியாப் புகழ் தந்தவை யாகும்."}}