{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qamn9pen/", "data": {"id": "qamn9pen", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qamn9pen/", "kind": "article", "headword": "பச்சைப் புறா", "romanization": "paccaip puṟā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.814707+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது மாடப் புறா அளவை ஒத்திருக்கும்.", "body_ta": "இது மாடப் புறா அளவை ஒத்திருக்கும். புறா வகையில் ஒன்றான பச்சைப் புறா நிறம் காண்பதற்குப் பச்சை நிறமாக இருப்பதால், இப்பெயர் பெற்றது.\n\nபழங்கள், பருப்பு, தானிய வகைகள் ஆகியன, இதன் முதன்மை உணவாகும். சில மரங்களின் மீது, இதற்கு நாட்டம் மிகுதி. ஆல், அத்தி போன்ற மரங்களை இது சுற்றிச் சுற்றி வருவதைக் காணலாம்.\n\nபச்சைப் புறா, பச்சை நிறத்தைக் கொண்டுள்ளமையால், மரங்களின் இலையோடு இலையாக மறைந்து, எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறது. இதனால், இது மனிதர்களுக்கும் புலப்படுவதில்லை. பொதுவாக, இப்பறவைகள் மர உச்சியிலிருந்து, தரை நோக்கி இறங்குவதில்லை. கூட்டங் கூட்டமாக இலை மறைவில் வாழக் கூடிய இயல்புடையது. மேலும், இப்பறவையின் குரல், குழல் வாசிப்பது போலச் செவிக்கு மிக இனிமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும் பச்சைப் புறா காணப் படுகிறது. —செ. மரியசூசைநாதன்"}}