{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q229cx4s/", "data": {"id": "q229cx4s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q229cx4s/", "kind": "word", "headword": "பிரகிருதி தத்துவம்", "romanization": "pirakiruti tattuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:29.751820+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூல தத்துவம், சடத்துவம், இராசம், தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவமாக மூலப்பிரகிருதி உடையது.அக்குணங்கள் வெளிப்படாமல் நிற்கும் நிலையே பிரகிருதி அல்லது மூலப்பிரகிருதி பிரகிருதி என்பது தமிழில் பகுதி எனத் திரித்து வழங்கப்படும். இது கலையில் தோன்றுவது. முக்குணங்கள் வெளிப் படாமல் நுண்ணிலையில் இருந்தால், பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்று பெயர். வியத்தம் - வெளிப்பாடு. அவ்வியத்தம் - வெளிப்படாமை. முக்குணங்கள் வெளிப்பட்டுச் சமமாய் நிற்கும் நிலை குண தத்துவம் எனப்படும்.இக்குணத் துவமே சித்தம் என்னும் அந்தக் கரணம் என்பது பலரது கருத்து. சைவ சித்தாந்தம் ஏற்கும் 36 தத்துவங்களாவன சிவதத்துவம் 5, விந்தியாதத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24, சைவம் நீங்கலான ஏனைய மதங்கள் ஏற்கும் தத்துவம் 24.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 199"}]}}